முகப்பு
தமிழ்நாடு

தமிழக எல்லைக்குள் நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் கைது!

தமிழக கடலோர எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் இன்று (நவ. 21) கைது செய்தனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:23 AM
பகிர்:

தமிழக கடலோர எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் இன்று (நவ. 21) கைது செய்தனர். 

இந்திய கடல் பகுதிக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, ராமேஸ்வரம் அருகேவுள்ள தனுஷ்கோடியில் இந்திய எல்லைக்குள் இலங்கை படகு ஒன்று அத்துமீறி இன்று (நவ. 21) நுழைந்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற காவல் துறையினர், அந்தப் படகை சுற்றுவளைத்து முற்றுகையிட்டனர். மேலும், படகில் இருந்த 5 மீனவர்களையும் காவல் படையினர் கைது செய்தனர்.

எல்லைத் தாண்டி மீன் பிடிக்க வந்தார்களா? அல்லது கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
 

முழு கட்டுரையைப் படிக்க →