திருச்சியில் ரௌடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
திருச்சி சனமங்கலம் பகுதியில் ரௌடி கொம்பன் என்கிற ஜெகன், காவல்துறையினரால் இன்று(புதன்கிழமை) சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி சனமங்கலம் பகுதியில் ரௌடி கொம்பன் என்கிற ஜெகன், காவல்துறையினரால் இன்று(புதன்கிழமை) சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரௌடி கொம்பன் என்கிற ஜெகன். இவர் மீது கொலை, வழிப்பறி, திருட்டு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் பகுதியில் ரௌடி கொம்பன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற காவல்துறையினர், அவரைப் பிடிக்க முயன்றபோது காவல்துறையினரைத் தாக்கிவிட்டு ரௌடி ஜெகன் தப்ப முயன்றுள்ளார்.
Advertisement
இதையும் படிக்க | பிரதமர் மோடி மிகவும் பதற்றமாக இருக்கிறார்: அசோக் கெலாட்
இதையடுத்து தப்ப முயன்ற ரௌடி ஜெகனை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த என்கவுன்ட்டர் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.