13 -ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு 
தமிழ்நாடு

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரம் விழுந்து பாதிப்ப

DIN


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரம் விழுந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவந்த நிலையில் புதன்கிழமை இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்தது. இதில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13 -ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலைகளில் விழுந்துகிடப்பதால் வியாழக்கிழமை அதிகாலை முதலே போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

13 -ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலைகளில் விழுந்துகிடப்பதால் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குன்னூர் மேட்டுபாளையம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க்கின்றது. நான்கு மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்; ஒருவா் கைது

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

மொபெட் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

நயினாா் நாகேந்திரனின் பிரசார பயணத்துக்கு காவல்துறை அனுமதி

போனஸ் கோரி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் ஆர்ப்பாட்டம்

SCROLL FOR NEXT