தமிழ்நாடு

ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் ஆஜர்!

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார்.

DIN

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார்.

நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா்அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் பேசினாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிா்ப்புகளும் எழுந்தன.

மன்சூா் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் நவ.20-ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், மன்சூா் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இன்று  விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

தொண்டை பிரச்னை காரணமாக பேச முடியாததால் விசாரணைக்கு இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், நாளை ஆஜராவதாகவும் காவல் துறைக்கு மன்சூர் அலிகான் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் மன்சூர் அலிகான் விசாரணைக்காக, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

SCROLL FOR NEXT