மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டஅருண் பாரதி 
தமிழ்நாடு

கோவில்பட்டி அருகே இளைஞர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

DIN

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட ஆலம்பட்டி கிராமத்தில் அய்யனார் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் அருகே உள்ள  கண்மாயில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக  மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ்-சுலோச்சனா தம்பதி மகன் அருண் பாரதி (20) என்பது  தெரிய வந்தது.

இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

மேலும், முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT