தமிழ்நாடு

கலைவாணர் அரங்கில் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

DIN

சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ”நிறுவனங்களின் நாயகர் –கலைஞர்” என்கிற பெயரில் சிறப்பு புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது.

இந்த நிலையில் இந்த புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் உடனிந்தனர்.

இதனிடையே தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னணி மாநிலமாக திகழ பல்வேறு நிறுவனங்களை தொடங்கி, சிறப்பாக நடைபெற காரணமாக விளங்கிய கலைஞரின் சிறப்புகளை அறிந்து கொள்ள உதவும் இந்த புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என தலைமைச் செயலாளர் சிவ தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT