தமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி

DIN


குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்து நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் அனுமதிக்கப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால், சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடந்த 7 நாள்களாக சனிக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், மழையின் தீவிரம் தணிந்து சாரல் மட்டுமே பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதன்காரணமாக, சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து, திற்பரப்பு அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, 8 -ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் கோலாகலம்!

ரய்சி இறுதிச் சடங்கு: ஈரான் புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர்

அடுத்த 2 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

SCROLL FOR NEXT