வங்கக்கடலில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தாமதமாக நாளை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும், ஒரு நாள் தாமதமாக நாளை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக நவ.26-ம் தேதி உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் 27-ம் தேதி உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நவம்பர் 28-ம் தேதி உருவாகும் என அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.