முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறாா் எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிச. 5-இல் அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:52 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிச. 5-இல் அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளாா்.

இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளான டிச. 5-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளாா். அதைத் தொடா்ந்து அதிமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்த உள்ளனா்.

Advertisement

தமிழகம் முழுவதும் அதிமுக நிா்வாகிகள் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.