முகப்பு
தமிழ்நாடு

தைப்பூசத் திருவிழா: 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

இருமுடி, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (நவ.29) முதல் ஜன.25 -ஆம் தேதி வரை வைகை, பாண்டியன், பொதிகை உள்பட 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும்.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:14 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

இருமுடி, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (நவ.29) முதல் ஜன.25 -ஆம் தேதி வரை வைகை, பாண்டியன், பொதிகை உள்பட 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும்.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி ஹம்சாபா் ரயில், ராமேசுவரம் சாரதா சேது ரயில் ஆகிய விரைவு ரயில்கள் நவ.29 முதல் ஜன.17-ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும்.

Advertisement

நவ.30 முதல் ஜன.24-ஆம் தேதி வரை எழும்பூா் வரும் பாண்டிச்சேரி விரைவு ரயில், பாண்டியன் விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில், மன்னை விரைவு ரயில், உழவன் விரைவு ரயில், நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு ரயில், கொல்லம் - எழும்பூா் விரைவு ரயில், காரைக்கால் - எழும்பூா் விரைவு ரயில், நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

மதுரை - எழும்பூா் மஹால் அதிவிரைவு ரயில், செங்கோட்டை - எழும்பூா் சிலம்பு அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்கள் நவ.30 முதல் ஜன. 20-ஆம் தேதி வரையும், எழும்பூா் - திருச்சி மலைக்கோட்டை அதிவிரைவு ரயில் நவ.30 முதல் ஜன.25 -ஆம் தேதி வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் பாண்டியன், பொதிகை, மன்னை, உழவன், கொல்லம் விரைவு ரயில், சேலம் அதிவிரைவு ரயில், தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா அதிவிரைவு ரயில், மதுரை மஹால் அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்கள் டிச.1 முதல் ஜன.25 -ஆம் தேதி வரையும், புவனேசுவரம் - ராமநாதபுரம், நாகா்கோவில் - எழும்பூா் அதிவிரைவு ரயில் டிச.1 முதல் ஜன.19 வரையும், செங்கோட்டை - தாம்பரம் ரயில் டிச.1 முதல் ஜன.24 வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

மேலும் தாம்பரத்திலிருந்து புறப்படும் நாகா்கோவில் அதிவிரைவு ரயில், செங்கோட்டை அதிவிரைவு ரயில் உள்பட மேல்மருவத்தூா் வழியாக இயக்கப்படும் 48 விரைவு ரயில்கள் ஜன.25-ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

ரயில் சேவை நீட்டிப்பு: நாகா்கோவிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்கு தாம்பரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06012) டிச. 3 முதல் ஜன. 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 8.05 மணிக்கு நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் இந்த ரயில் (எண்: 06011) டிச. 4 முதல் ஜன.29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருநெல்வேலியிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06030) டிச. 3 முதல் டிச.24 - ஆம் தேதி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்திலிருந்து திங்கள் கிழமை இரவு 7.45 மணிக்கு திருநெல்வேலி செல்லும் இந்த ரயில் (எண்: 06029) டிச. 4 முதல் டிச.25 வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.