பட்டதாரி ஆசிரியர் பணி: அவகாசம் நீட்டிப்பு
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) கடந்த மாதம் வெளியிட்டது.
அதன்படி போட்டித் தோ்வு ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கியது. நவ.30-ஆம் தேதி கடைசி நாளாகும்.
Advertisement
இதனிடையே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயா்த்தி ஆசிரியா் தோ்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சியில் 86 பணியிடம், பள்ளிக் கல்வியில் 52, ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் 144, தொடக்கக் கல்வித் துறையில் 78 என மொத்தம் 360 பணியிடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையவழி விண்ணப்பம் பதிவேற்ற நவ.30ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில், டிசம்பவர் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.