கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச.4-ல் உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவிலில் உள்ள புனித சவேரியார் தேவாலய திருவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவிப்பை அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான நாகா்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியாா் பேராலயத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
8 ஆம் நாளான டிச. 1இல் மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட அருள்பணியாளா்கள் தலைமை வகித்து ஆடம்பரக் கூட்டு திருப்பலி நிறைவேற்றுகின்றனா். கோட்டாறு பங்கு அருள்பணிப் பேரவையினா் சிறப்பிக்கின்றனா்.
டிச.2 இல் மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் திருப்பலி நிறைவேற்றுகிறாா். அன்று இரவு 10.30 மணிக்கும், டிச.3இல் இரவு 10 மணிக்கு சவேரியாரின் தோ்பவனி நடைபெறுகிறது.
இதையும் படிக்க: மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை!
நிறைவு நாளான டிச.4ஆம் தேதி காலையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறாா். 8 மணிக்கு மலையாளத் திருப்பலி நடைபெறும். இதில், திருவனந்தபுரம் உயா் மறைமாவட்ட ஆயா் கிளாடின்அலெக்ஸ் தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறாா்.