தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

சட்ட விரோதப் பணப்பரிவா்த்தனை தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜி, மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பரிசீலனைக்காக அவா் சம்பந்தப்பட்ட சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை அவா் தரப்பில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று காலை ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்னைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம் என்றும், மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவக் காரணங்களுக்கான ஜாமீன் மனுவை திரும்பப் பெறுவதாகவும், கீழமை நீதிமன்றத்தில் சாதாரண ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னதாக, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கடந்த அக்டோபா் 19-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT