கோப்புப்படம் 
தமிழ்நாடு

இன்று முதல் கடற்கரை -தாம்பரம் இரவு ரயில் ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை(நவ.29) முதல் இரண்டு வாரத்திற்கு கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் இரவு சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

DIN


சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை(நவ.29) முதல் இரண்டு வாரத்திற்கு கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் இரவு சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை (நவ.29) முதல் டிச.14-ஆம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்த நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் மாநாடு: பிரேமலதா

சென்னையில் 2 மாதங்களுக்குள் வருகிறது டபுள் டக்கர் பேருந்து?

பிரசாரம், சாலை வலம்: வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்தது தமிழக அரசு!

தனியார் குடோனுக்குள் நுழைந்த சிறுத்தை! நூலிழையில் உயிர்தப்பிய காவலாளி! | Coimbatore

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT