தமிழ்நாடு

சென்னை, 7 மாவட்டங்களுக்கு காலை 10 வரை ஆரஞ்சு எச்சரிக்கை

DIN

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலை 10 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை காலைமுதல் கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணிவரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானத்தில் இயந்திர கோளாறு நூலிழையில் தப்பிய 376 பயணிகள்

’தனித்து நின்று போரிடுவோம்’ இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு

சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற பரிசீலிக்குமாறு சிறைத் துறைக்கு உத்தரவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

தூய்மைப் பணியாளா்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT