திருநெல்வேலி நகரின் கீழரத வீதியில் அழகு நிலைய பொருள் விற்பனை கடையில் பணியாற்றிய இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், திருப்பணி கரிசல்குளத்தைச் சேர்ந்த சந்தியா (18), காதலிக்க மறுத்ததால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. சாலை என பொய் சொன்ன ஜிபிஎஸ்: ஆற்றில் மூழ்கி பலியான மருத்துவர்கள்
கடையிலிருந்து அருகில் உள்ள கிடங்குக்குச் சென்று பொருள்களை எடுக்கச்சென்ற நிலையில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் குறித்து திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.