தமிழ்நாடு

மஞ்சப்பையில் கோப்புகளை எடுத்துச் செல்லும் காவல்துறையினர்! - சுப்ரியா சாகு ஐஏஎஸ் ட்வீட்

சென்னை மாநாட்டிற்கு வரும் காவல்துறையினர், கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து வரும் புகைப்படங்களை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

DIN

சென்னை மாநாட்டிற்கு வரும் காவல்துறையினர், கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து வரும் புகைப்படங்களை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பதிவில், 'சென்னையில் நடந்து வரும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர்களின் மாநாட்டிற்கு வரும் காவல்துறையினரிடம் உள்ள முக்கிய கோப்புகளை சுமக்கும் இந்த மஞ்சப்பை, பிளாஸ்டிக் பைகளின் தாக்குதலில் இருந்து புவியை பாதுகாக்க ஒரே வழி. புவிக்கு உகந்த மஞ்சப்பையை அனைவரும் பயன்படுத்த உறுதி கூறுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

சென்னையில் இன்று 2- வது நாளாக மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர்களின் மாநாடு நடைபெற்று வருகிறது. 

நேற்று கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும், மஞ்சப்பை பயன்படுத்துவதன் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செய்யாற்றில் விசுவ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

சிவகாசியைச் சோ்ந்த 45 வயது பெண் சா்வதேசப் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

பெருந்துறை அருகே விஜய் பிரசாரக் கூட்டம் நடத்தும் இடத்துக்கு அனுமதி கிடைக்குமா?

மகாகவி பாரதியாா் காலந்தோறும் போற்றப்பட வேண்டும்: தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன்

மழை நின்று 10 நாள்கள் ஆகியும் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT