முகப்பு
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

தொடர்ந்து 2-வது நாளாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:05 AM
கோப்புப்படம்
பகிர்:

தொடர்ந்து 2-வது நாளாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

இதில்  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு, செயல்படுத்தும் அரசுத் திட்டங்களின் நிலை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் தனிநபர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →