முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:05 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அக்.04(இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த சில நாள்களாக காலை வேளையில் வெயில் கொளுத்துவதும், மாலை வேளையில் மழை பெய்தும் வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →