முகப்பு
தமிழ்நாடு

கொடைக்கானலில் அக்.8ம் தேதி சுற்றுலா தலங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரத்து

கொடைக்கானலில் அக். 8 ஆம் தேதி மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரத்து செய்து வனத்துறை அறிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:06 AM
பகிர்:


திண்டுக்கல்: கொடைக்கானலில் அக். 8 ஆம் தேதி மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரத்து செய்து வனத்துறை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை வன உயிரின பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அக். 8 ஆம் தேதி மட்டும்  சுற்றுலா தலங்களுக்கான நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வனத்துறை அறிவித்துள்ளது. 

அதன்படி, கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மர சோலை, தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஒருநாள் மட்டும் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.