தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி அமைச்சர் உதயநிதி பேச தடை நீட்டிப்பு

DIN

கொடநாடு வழக்கில்  அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செப். 7-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது என்றும், ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீா்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது அறிக்கை எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும் உள்ளன. 

எனவே, என்னைப் பற்றி பேச அமைச்சா் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 2ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை ஏற்று விசாரணை நவம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT