முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:06 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூர், சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →