ஆஸி. நாடாளுமன்றக் குழு 
தமிழ்நாடு

தமிழக பேரவைக் கூட்டத்தை பார்வையிடும் ஆஸி. நாடாளுமன்றக் குழு!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

DIN

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

நிகழாண்டின் 2-ஆம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் காலை 10 மணிக்கு கூடியுள்ளது.

இந்த கூட்டத்தில் காவிரி நீரை திறந்துவிட கா்நாடகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் தீா்மானம் கொண்டு வரவுள்ளார். முதலில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மில்டன் டிக் தலைமையில் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள் உள்பட 11 பேர் தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகின்றனர்.

அவர்களை வரவேற்ற பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களின் சார்பில் வரவேற்பதாக பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT