தமிழ்நாடு

ஓபிஎஸ் இருக்கையில் மாற்றமில்லை: பேரவைக்கு வராத இபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை இந்த முறையும் வேறு இடத்துக்கு மாற்றாததால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

DIN

தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை இந்த முறையும் வேறு இடத்துக்கு மாற்றாததால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு அதிமுகவினர் கடிதம் எழுதி இருந்தனர்.

இருப்பினும், தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கையின் அருகேவுள்ள துணைத் தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இன்று கூடியுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்தப் பிரச்னை எதிரொலித்துள்ளது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பேரவை தலைவரிடம் மீண்டும் ஓபிஎஸ் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், இந்த கூட்டமும் இருக்கை மாற்றாமல் தொடங்கியதால், கூட்டத்துக்கு வராமல் பேரவையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையிலேயே எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT