கிருஷ்ணகிரி அருகே கண்டெய்னர் லாரி மீதுமோதி விபத்துக்குள்ளான கார் 
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - கேரளாவைச் சேர்ந்த 2 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர்.

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர்.

சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரசாயனம் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, கிருஷ்ணகிரி அடுத்து கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியரசி பிரிவு சாலை அருகே புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தபோது,  கேரள மாநிலம்  கொல்லம் மாவட்டத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதியது.  இதில், காரில் பயணம் செய்த சந்திப் (26), அமான் (26), ரியாஸ் (24), மித்துஜிலால் (26), கிருஷ்ணன் (22) ஆகிய ஐந்து பேரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்தில்  சிக்கிய ஐந்து பேரையும் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர், மீட்டு,  கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதில் பலத்த காயமடைந்த சந்திப், அமான் ஆகிய இருவரும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தனர்.  

இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT