தமிழ்நாடு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமானது மயிலாடுதுறை: சட்டத்திருத்தம் நிறைவேற்றம்

DIN

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை சேர்ப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தமிழக சட்டப்பேரவை இன்றைய கூட்டத்தில் மேம்படுத்தப்பட்ட வேளாண் மண்டல திருத்த சட்ட மசோதாவை வேளாந்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவனது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை சேர்க்கப்பட்டதால், ஷெல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் ஆய்வுகள், விவசாயம் அல்லாத பணிகளுக்கு துளையிடுதல் போன்ற பணிகளுக்கு இனி அனுமதி அளிக்கப்படாது.

அதேபோல், விவசாயம் அல்லாத தொழில் சார்ந்த புதிய திட்டங்களுக்கும் மயிலாடுதுறையில் இனி அனுமதி வழங்கப்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT