முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:07 AM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே 2 முறை தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்று கூறி செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் 9 மருத்துவர்களின் அறிக்கை அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இருமுறை மனு தாக்கல் செய்தாா். இந்த மனுக்கள் ஜூன் 16, செப். 20-ஆம் தேதிகளில் முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடா்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில் திங்கள்கிழமை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து சிகிச்சைக்கு பின்னா் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில், சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளாா்.
 

முழு கட்டுரையைப் படிக்க →