தஞ்சையில் முழு அடைப்புப் போராட்டம் 
தமிழ்நாடு

காவிரி விவகாரம்: தஞ்சையில் முழு அடைப்புப் போராட்டம்

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலைமுதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

DIN

தஞ்சாவூர்: கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலைமுதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழகத்துக்குரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், உடனடியாக மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் அமைப்புகளிடம் போராட்டத்தை தூண்டிவிடும் பாஜகவை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் மத்திய அரசு கண்டித்தும் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்று காவேரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

இதனால் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க், பால் உள்ளிட்ட அத்தியாவசிய  கடைகள் மட்டுமே திறந்து உள்ளன.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வணிகர்கள் மற்றும் காய்கறிக்கு சந்தைகள் - மார்க்கெட்டுகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT