விக்னேஷ்-வேன் மீது மோதிய இருசக்கர வாகனம்-ஜெகநாதன் 
தமிழ்நாடு

திருவாரூர்: வேன் மீது இருசக்கர வாகனம் மோதி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

திருவாரூர் மாவட்டம், காட்டூர் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் வேன் மீது மோதியில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

DIN


திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், காட்டூர் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் வேன் மீது மோதியில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருவாரூர் மாவட்டம், மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ஆனந்த் மகன் விக்னேஷ் (20). இவர் நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.  உடன்படிக்கும் இவரது நண்பர் சேங்காலிபுரம் வடவேர் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் ஜெகநாதன் (19).

இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வேகமாக சென்று கொண்டிரு்தனர். திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் சென்றுபோது முன்னாள் சென்ற பேருந்தை முந்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், மாணவர் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த விக்னேஷை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை  அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தார். 

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் இருவர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ண நிலவே... ஸ்மிருதி காஷ்யப்!

தும்பை பூ... நிகிலா விமல்!

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைக்குனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

SCROLL FOR NEXT