தமிழ்நாடு

செங்கம் அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதல்: 7 பேர் பலி

செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 7 பேர் பலியானார்கள்.  

DIN

செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 7 பேர் பலியானார்கள். 
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கார் ஒன்றில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு கர்நாடகத்துக்கு காரில் திரும்பினர். அப்போது இவர்கள் சென்ற கார் செங்கம் அருகே திருவண்ணாமலை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் திடீரென எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 
இந்த விபத்தில்  சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியானார்கள். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கால்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். 
இதனிடையே செங்கம் அருகே நிகழ்ந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT