தமிழ்நாடு

சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு!

DIN


சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒடிசா தம்பதியின் 1 வயது ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் செங்குன்றத்தில் தனிப்படைபோலீசார் மீட்டனர்.

ஒடிசாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை குழந்தையுடன் வந்த நந்தினி கண்கார் - லங்கேஸ்வர் தம்பதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே உறங்கிய நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் குழந்தை காணாமல் போனது.  

இதுகுறித்து சென்ட்ரல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நள்ளிரவு 1 மணியளவில் குழந்தையை மர்ம நபர் ஒருவர் தூக்கிச் சென்றதை கண்டறிந்தனர். 

அந்த மர்ம நபர் ஆட்டோவில் குழந்தையுடன் ஏறிச் சென்றதும் சிசிடிவி பதிவு மூலம் கண்டறிப்பட்டது. 

உடனடியாக ஆட்டோ எண்ணை வைத்து விசாரித்த போலீசார், ஆட்டோ ஓட்டுநரின் தகவலை கேட்டறிந்தனர். இதுகுறித்த விசாரணையில் ஆட்டோவில் வந்த மர்ம நபரை செங்குன்றத்தில் இறக்கிவிட்டதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து செங்குன்றம் விரைந்த தனிப்படை போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில் தம்பதி ஒருவர் குழந்தையை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை மடக்கி பிடித்து குழந்தை மீட்ட தனிப்படை போலீசார், அந்த குழந்தை ஒடிசா தம்பதியினர் குழந்தை தான் என்பதை உறுதி செய்தனர். 

இதையடுத்து குழந்தையை கடத்திய ஜார்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த பரபாஸ் மெண்டல், நமீதா தம்பதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் குழந்தை கடத்தல் தொடர்பாக பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை காணவில்லை என புகார் அளித்த 4.30 மணி நேரத்தில் சிசிடிவி காட்சியை வைத்து செங்குன்றம் அருகே குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

SCROLL FOR NEXT