பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு: முதல்வர் நிதியுதவி!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.
வெடி விபத்து நிகழ்ந்த அறையில் 15 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் சிவகாசி வட்டம், மங்களம் கிராமம் ஆகிய இருவேறு இடங்களில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில் இன்று (17-10-2023) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இதையும் படிக்க: கார்கே அல்லது ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: சசி தரூர்
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.