கோவையில் இடிந்து விழும் அரசு குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு 
தமிழ்நாடு

மாவீரன் பட பாணியில் இடிந்து விழும் அரசுக் குடியிருப்பு: கோவையில் பெண் காயம்

கோவையில் மாவீரன் படத்தின் பாணியில் இடிந்து விழும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

DIN

கோவை: கோவையில் மாவீரன் படத்தின் பாணியில் இடிந்து விழும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழக அரசு மூலமாக நிர்வகிக்கப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகும். இதில் குடிசை பகுதிகளை மேம்படுத்தி அதற்கு மாற்றாக வீடு கட்டி தரப்படுகிறது. இந்த குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு வீடு என்கிற அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் கோவை செல்வபுரத்தில் 500-க்கும் மேற்பட்டோருக்கு பயனளிக்கும் விதமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு சலுகை அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் கொடுக்கப்பட்டது.

பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு, தற்போது இடிந்து விழத் துவங்கியுள்ளது. குறிப்பாக உதயகுமார், தங்க ஜோதி தம்பதியினர் கவினேஷ் குமார், ஸ்ரீஹரன் ஆகிய இரு குழந்தைகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள மாடியின் சுவர், தங்க ஜோதியின் கையின் மேல் இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதத்திலிருந்து தப்பித்தார். இதனால் அவர் காயம் அடைந்துள்ளார்.

இந்த குடியிருப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டு 10 மாதங்களே ஆகும் நிலையில் மாவீரன் படம் பாணியில் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு சுவற்றில் ஆணி அடித்தாலே இடிந்து விழும் சூழ்நிலை உள்ளதால் அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

SCROLL FOR NEXT