தமிழ்நாடு

தமிழகத்தில் அக்.25 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

DIN

தமிழகத்தில் அக்.25 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து இன்று(அக்.19) நிறைவு பெற்றது. 

நேற்று காலை அக்.18 தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றறழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இது அக்.21ல் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 

நேற்று காலை தென்கிழமை வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக அக்.21ல் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அக்.23ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 

கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும். 

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

அக்.25 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்கள் அக்.19(இன்று) தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வனத்துறையைக் கண்டித்து நடைப்பயணம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு

கெங்கவல்லி ஒன்றியத்தில் படிக்காதவா்கள் கணக்கெடுப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT