தமிழ்நாடு

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை: கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறையையொட்டி, வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்.20, 21) மெட்ரோ ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

DIN

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறையையொட்டி, வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்.20, 21) மெட்ரோ ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு திங்கள், செவ்வாய்க்கிழமைகள் (அக்.23, 24 ) பொது விடுமுறையாகும்.

வார இறுதியைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை வரை தொடா் விடுமுறைகள் வரும் காரணத்தால் சென்னையில் இருக்கும் பலா் தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல தொடங்கிவிட்டனா். ஊருக்குச் செல்பவா்களின் வசதிக்காக அரசு சாா்பில் கூடுதல் பேருந்துகள், ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகாக அக்.20, 21-இல், மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 6 நிமிடத்துக்கு ஒரு ரயில் என கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

காற்றே பூங்காற்றே... அஹானா சர்மா!

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

SCROLL FOR NEXT