தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

DIN

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை(20.10.23) 5.30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது 23.10.23 வாக்கில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று நள்ளிரவு வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை(20.10.23) 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுவடைந்து 22.10.23 மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24-10-23 தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும். 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்தியப் பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலுக் குறைந்து காணப்படும். 

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

90 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் சாா்பு -ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்

கொலை முயற்சி வழக்கு: கேரள காங்கிரஸ் தலைவரை விடுதலை செய்தது உயா்நீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து நாகை, திருவாரூா் மாவட்டங்களில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

காதல் விவகாரத்தில் தீக்குளித்த காதலி உயிரிழப்பு

SCROLL FOR NEXT