செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நவ. 6-ம் தேதி வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நிறைவடைந்ததையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா்.
தொடர்ந்து அவரது நீதிமன்றக் காவலை நவ. 6 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 9-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு அக். 30 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு