கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயங்காது!

ஆம்னி பேருந்துகள் இன்று(அக்.24) மாலை 6 மணி முதல் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

DIN

ஆம்னி பேருந்துகள் இன்று(அக்.24) மாலை 6 மணி முதல் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து  ஏராளமான மக்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா். மொத்தம் 3 லட்சத்துக்கும் அதிகமானோா் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் சென்றதாக போக்குவரத்துத் துறை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் இன்று மாலை 6 மணி முதல் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை, அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த வேலை நிறுத்த அறிவிப்பை ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றுடன் தொடர் விடுமுறை முடிந்து, சொந்த ஊர் திரும்ப ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த அறிவிப்பால், சொந்த ஊர் திரும்புவோர் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி..! பணிச்சுமை காரணமா?

புயல் சின்னம்: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

எஸ்ஐஆர்-க்கு எதிராக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்

பிகார் முதல்வர் பதவியேற்பு விழா! தேஜ கூட்டணி முதல்வர்களுடன் விமரிசையாக நடத்த திட்டம்!

சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன: நடிகர் சரவணன்

SCROLL FOR NEXT