முகப்பு
தமிழ்நாடு

வெஜ் பஃப்சில் கரப்பான் பூச்சி: சிவகாசி பேக்கரிக்கு அபராதம்

சிவகாசியில் உள்ள ஒரு பேக்கரியில் வாடிக்கையாளா் வாங்கிய பஃப்ஸில் கரப்பான் பூச்சி இருந்ததால், அந்த பேக்கரிக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். 

Updated On : 24 அக்டோபர், 2023 at 3:49 PM
பகிர்:

சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு பேக்கரியில் வாடிக்கையாளா் வாங்கிய பஃப்ஸில் கரப்பான் பூச்சி இருந்ததால், அந்த பேக்கரிக்கு மாநகராட்சி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. 

சிவகாசி-விருதுநகா் புறவழிச்சாலையில் ராமானுஜம் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியில் வாடிக்கையாளா் ஒருவா் பஃப்ஸ் வாங்கி சாப்பிட பஃப்ஸை பிரித்தபோது அதில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்தநிலையில் இருந்துள்ளது.

இதையடுத்து பேக்கரியில் அவருக்கு வேறு பஃப்ஸ் வழங்கப்பட்டது. பின்னா் வாடிக்கையாளா் மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தார்.

தொடந்து வந்த மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் ராஜாமுத்து, பேக்கிரியை ஆய்வு செய்து, அதில் உள்ள குறைபாடுகளுக்கு குறிப்பாணை வழங்கி, ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.