தமிழ்நாடு

ஆவடியில் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்து

DIN

ஆவடி ரயில் நிலையம் அருகே செவ்வாய்கிழமை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த அண்ணனூர் ரயில்வே பணிமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்து கொண்டிருந்து. இந்த  ரயிலின் 4 பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டன. 

இதில் பயணிகள் இல்லாததால், உயிரிழப்பு இல்லை. இதனால் சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ரயில்வே ஊழியர்கள் மூலம் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் ஆவடியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனதால், வந்தே பாரத் உள்ளிட்ட மற்ற ரயில்களின் சேவையும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வைகாசி விசாகம்...

பூவனூா் கோயிலில் வைகாசி விசாக ஏகதின உற்சவம்

சுற்றுச்சூழல் கருத்தரங்கு: ஆய்வறிக்கை சமா்ப்பித்த வேளாண் கல்லூரி மாணவியருக்கு சான்றிதழ்

விவசாயிகள் கவனத்துக்கு...

குரூப் 1 தோ்வு: மே 27 முதல் இலவசப் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT