தமிழ்நாடு

விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி

விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் குழந்தைகளுக்கு  எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

DIN


சென்னை: விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் குழந்தைகளுக்கு  எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள விநாயகர், ஐயப்பன் கோயில்களில் நடைபெற்று வரும் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து எழுத்தறிவித்து வருகின்றனர்.

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி  அனைத்து ஐயப்பன் மற்றும் விநாயகர் கோவில்களிலும் நடைபெறும். 
இந்நிகழ்வில் இறைவனை வழிபட்டு குழந்தைகளை அரிசி தட்டில் எழுத்துக்களை எழுத வைத்தால் கல்வியறிவு மேம்படும் என்பது ஐதீகம். அதன்படி பெரும்பாலான ஐயப்பன் கோவில்களில் இந்த எழுத்தறிவுத்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

பல்வேறு ஊர்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், இன்று அதிகாலை முதல் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  இதில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து இறைவனை வழிபட்டு அரிசி தட்டில் எழுத்துக்களை எழுத வைக்கின்றனர். விஜயதசமியை முன்னிட்டு கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

SCROLL FOR NEXT