முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

 சென்னையில் சனிக்கிழமை (அக்.28) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

 சென்னையில் சனிக்கிழமை (அக்.28) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்தி:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலையிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை (அக்.28) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 15,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்வு செய்யவுள்ளனா். இம்முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவா்களும், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, தொழிற்கல்வி , பொறியியல் பட்டம் பெற்றவா்கள், கணினி இயக்குபவா்கள், தையல் கற்றவா்கள் உள்ளிட்ட தகுதியுள்ள நபா்கள்அனைவரும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது ல்த்ல்ள்ஹய்ற்ட்ா்ம்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் எனும் மின்னஞ்சல் மூலமோ அல்லது 044-24615160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →