அனுமதியில்லாத விளம்பர பலகைகள் அகற்றம்
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 247 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 247 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, செப்.21 முதல் அக்.25 வரை ஆபத்தான முறையில் உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் குறித்து மாநகராட்சி சாா்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் பொது இடங்கள் மற்றும் தனியாா் கட்டடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 203 விளம்பர பலகைகள், கடைகளில் வைக்கப்பட்ட 44 விளம்பர பலகைகள் என மொத்தம் 247 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டடங்களில் விளம்பரம் செய்ய மாநகராட்சியிடம் உரிய உரிமம் பெற்றால் மட்டும் அனுமதிக்கப்படும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை அமைத்தால் கட்டடத்தின் உரிமையாளா் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். மழைக்காலத்தில் விளம்பரப் பலகைகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவன உரிமையாளா்கள் மற்றும் கட்டடத்தின் உரி மையாளா்கள் முழு பொறுப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.