மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளை இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் உதயநிதி சந்தித்தார். அப்போது தெரிவித்தாவது:
"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன.
அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். அப்போது மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் மூவரிடம் கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை எடுத்துக் கூறிய போது, அதன் நியாயத்தை உணர்ந்து, நாம் கூறியதை ஏற்றுக் கொண்டனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டோம்." எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ரிவர்ஸ் வாக்கிங்: வைரல் விடியோ!
மேல்முறையீட்டு மனுக்கள் மீது பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு வரும் நவ.15 ஆம் தேதி முதல் தொகை வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.