தமிழ்நாடு

வரைவு வாக்காளர் பட்டியல்: விழுப்புரம் மாவட்டத்தில் 16.49 லட்சம் வாக்காளர்கள்

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 16.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெளியிட்டார்.

அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 1966 வாக்குச் சாவடிகள் உள்ளன. 8,15,967 ஆண் வாக்காளர்கள், 8,33,657 பெண் வாக்காளர்கள், 208 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 16,49,832 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், விழுப்புரம் தொகுதியில் அதிகபட்சமாக 2, 54,612 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக மயிலம் தொகுதியில் 2,09,849 வாக்காளர்களும் உள்ளனர்.

திருக்கோவிலூர் தொகுதியில் அதிகபட்சமாக 1, 27,434 ஆண் வாக்காளர்களும், விழுப்புரம் தொகுதியில் அதிகபட்சமாக 1,30,137 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

இதுபோல குறைந்தபட்சமாக ஆண் வாக்காளர்கள் மயிலம் தொகுதியில் உள்ளனர். இங்கு 1,04,976 ஆண் வாக்காளர்களும், 1,04,853 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT