தமிழ்நாடு

தஞ்சை பெருவுடையாருக்கு 1000 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம்!

DIN

ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால்  அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

ஒவ்வொரு ஐப்பசி பெளர்ணமியை அன்றும் சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னம், 500 கிலோ காய்கறி மற்றும் 150 கிலோ பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. 

அன்னாபிஷேகத்திற்கு பக்தர்கள் வழங்கிய 1000 கிலோ அரிசி சாதமாகத் தயார் செய்யப்பட்டன. பின்னர் தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டன. இதையடுத்து வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், மாங்காய், பூசணிக்காய் சுரைக்காய் முட்டைகோஸ், கேரட், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட 500 கிலோ  காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 

மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இரவில் லிங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட அன்னம் பக்தர்கள், கால்நடைகளுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். 

இன்று சந்திர கிரகணம் என்பதால் இரவு 7 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

மேகதாது விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது -எடப்பாடி பழனிசாமி

மழையால் தாமதமாகும் நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா போட்டி!

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

நாட்டின் மிக பெரிய ஐபிஓவை தாக்கல் செய்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா!

SCROLL FOR NEXT