கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் பாஜக குழு இன்று ஆய்வு

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் மீதான காவல் துறை நடவடிக்கை எடுத்தது தொடர்பாக, சென்னை வந்துள்ள பாஜக குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது.

DIN

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் மீதான காவல் துறை நடவடிக்கை எடுத்தது தொடர்பாக, சென்னை வந்துள்ள பாஜக குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது.

2 நாள்கள்பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜக ஆய்வு குழு, நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில்,  இன்று ஆய்வு மேற்கொள்கிறது. பாஜக நிர்வாகிகள் அமர்பிரசாத் ரெட்டி, எஸ்.ஜி. சூர்யா, சுரேந்தர் குமார், வினோத் குமார் வீடுகளில் இன்று விசாரணை மேற்கொள்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த கொடிக் கம்பத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை(அக்.20) இரவில் அகற்றினா். இதைத் தொடா்ந்து காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதல் தொடா்பாக தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் அமா்பிரசாத் ரெட்டி உள்பட 13 போ் கைது செய்யப்பட்டனா். இதே போன்று, சமூகஊடகங்களில் திமுக அரசை விமா்சனம் செய்து பதிவிடும் பாஜகவினரை காவல் துறையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனா்.

பாஜகவினருக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா அறிவித்தார். அந்தக் குழுவில், கா்நாடக முன்னாள் முதல்வா் சதானந்த கெளடா, எம்.பி. சத்ய பால் சிங், ஆந்திர பாஜக தலைவா் புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் எம்.பி. ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்நிலையில், சென்னை வந்துள்ள பாஜக குழு இன்று ஆய்வு மேற்கொண்டு, தமிழக அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை பாஜக தலைமையிடம்  அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

SCROLL FOR NEXT