முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இந்திய கம்யூ. அலுவலகம் தாக்குதல்: 4 பேர் கைது

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கற்கள், பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அங்கு ஆட்டோவில் இருந்த நபர்கள் குடித்துவிட்டு பாட்டிலை வீசியதாகக் கூறப்பட்டது. 

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து தென் சென்னை மாவட்டச் செயலாளர் சிவா கொடுத்த புகாரின் பேரில் தி. நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்பில் வசித்து வரும் தி. நகரைச் சேர்ந்த அலெக்ஸ் பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →