தமிழ்நாடு

உயரும் வெங்காய விலை: பெரிய வெங்காயம் கிலோ ரூ.70;சின்ன வெங்காயம் கிலோ ரூ.120

கோயம்பேடு சந்தையில் வெங்காய வரத்து குறைந்துள்ள நிலையில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

DIN

கோயம்பேடு சந்தையில் வெங்காய வரத்து குறைந்துள்ள நிலையில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான வெங்காயத் தேவையை மகாராஷ்டிர மாநிலம் பூா்த்தி செய்து வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் உற்பத்தி குறைந்ததால், அங்குள்ள முக்கிய வெங்காய சந்தையான நாசிக்கில் இருந்து தமிழகத்துக்கு வரும் வெங்காயத்தின் அளவு கடந்த ஒருமாதமாக குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வெங்காய வரத்து குறைந்துள்ளது.

இதனால், கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. இங்கு மொத்த விற்பனையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாசிக்கிலிருந்து வரும் முதல் தரத்திலான ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.70-க்கும், பெங்களூரூவிலிருந்து வரும் இரண்டாம் தர பெரிய வெங்காயம் ஒருகிலோ ரூ.60-க்கும், ஆந்திரத்தில் இருந்து வரும் மூன்றாம் தர பெரியவெங்காயம் ஒருகிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபா் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒருகிலோ பெரிய வெங்காயம் அக்டோபா் கடைசி வாரத்தில் ரூ.70-ஐ எட்டியுள்ளது.

சில்லறை விற்பனையில் ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.80 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது. இது ஒருபுறமிருக்க அக்டோபா் முதல் வாரத்தில் ரூ.70-க்கு விற்பனையான ஒருகிலோ சின்ன வெங்காயம், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. சில்லறை விற்பனையில் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு இருப்பில் வைத்துள்ள வெங்காயத்தை விடுவிப்பதாக அறிவித்திருப்பதால், அடுத்த சில தினங்களில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT