சென்னை, 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை தொடரும்!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பகல் 1 மணிவரை பரவலாக மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுசென்னை, 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை தொடரும்!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பகல் 1 மணிவரை பரவலாக மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பகல் 1 மணிவரை பரவலாக மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதற்கிடையே, இலங்கை மற்றும் அதனையொட்டிய குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை: முதல்வர்
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிவரை மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.